search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து போலீசார்"

    • போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது.
    • ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    போக்குவரத்து போலீசார் 8 மணி நேரம் நின்று பணி செய்யும் சூழல் உள்ளது. சாலையில் நிலவும் காற்றின் தன்மை சற்று மோசமாகத்தான் இருக்கும். ஒருவர் 4 அல்லது 5 ஆண்டுகள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது காற்றின் மாசுபாடு காரணமாக அவர் பாதிக்கப்படுவார். எனவே போக்குவரத்து போலீசாருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமான நடவடிக்கை ஆகும்.

    கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது போக்குவரத்து போலீசார்தான். எனவே போக்குவரத்து போலீசாருக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் முக்கியம்.

    முழு உடல் பரிசோதனை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த விவர குறிப்புகள், இதுபோன்ற முகாம்களுக்கு வரும்போதும் பயனுள்ளதாக இருக்கும். ஆண் போக்குவரத்து போலீசாரின் மனைவிகளும், பெண் போக்குவரத்து போலீசாரின் கணவர்களும் முகாமில் பங்கேற்கலாம். இது போன்ற மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தி அனைத்து போக்குவரத்து போலீசாரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், நீரழிவு, காசநோய், இதய நோய், காது, மூக்கு, தொண்டை, எலும்புகள், பல், கண் ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றன.

    இதில் போக்குவரத்து போலீசார் 250 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சாமே சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும்,
    • போக்குவரத்து விதிகளை கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.

    கோத்தகிரி,

    புதிய போக்குவரத்து சட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த அபராத தொகை அதிகரிப்பு குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வந்த நிலையில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும் போது ஏதேனும் அபராதம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே போக்குவரத்து விதிகளை தற்சமயம் கடைபிடித்து ஓட்ட தொடங்கி விட்டனர்.

    இந்த போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடித்து ஓட்ட வேண்டும், அப்படி ஓட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் நன்மை குறித்து கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    • சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நாளை காலை நடக்கிறது.
    • அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீசார் இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் விழா நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ள சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக காந்தி மண்டப சாலை, கான்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது.

    எனவே விமான நிலையம் செல்வோர் மற்றும் இதர வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை மேற்கண்ட இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×